இல்லத்தரசிகள் மகிழ்ச்சி… தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76, சவரனுக்கு ரூ.608 குறைந்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு விலையேற்றத்தைக் கண்ட தங்கம் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரியத் தொடங்கியது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திசை திருப்பியது. முதலீடுகள் அதிகரிக்க, அதிகரிக்க விலையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் பிறகு, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 குறைந்து ரூ.4,342க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,736க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.1.60 சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,600க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…