மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு வந்துள்ளார். 

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ரிலையன்ஸ். இதன் தலைவராக முகேஷ் அம்பானி செயல்படுகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம்செய்த ஜியோ நெட்வொர்க் சேவையை தற்போது 40 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தொலைத்தொடர்பு மட்டுமின்றி, ரிலையன்ஸ் டிஜிட்டல் ரிலையன்ஸ் பிரஸ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், மெகாமார்ட், ரிலையன்ஸ் பெட்ரோல் என பல்வேறு தொழில்துறைகளில் ஈடுப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா காலத்தில் முகேஷ் அம்பானியில் சொத்து மதிப்பு சரிந்தது. இதையடுத்து ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை அவர் இழந்தார். சீனாவைச் சேந்த தொழிலதிபர் ஷூங் ஷான்சம் முதலிடம் பிடித்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனாவைச் சேந்த தொழிலதிபர் ஷூங் ஷான்சம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…