ஆயில்-டு-கெமிக்கல்ஸ் வர்த்தகத்தை 100% துணை நிறுவமனாக மாற்றியுள்ளது ரிலையன்ஸ்!

ஆயில்-டு-கெமிக்கல்ஸ் தொழில் மற்றும் வர்த்தகத்தை 100% துணை நிறுவமனாக மாற்றியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

இது தொடர்பாக பங்குச்சந்தைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில், ஆர்.ஐ.எல். நிறுவனம் கூறும்போது O2C தொழிலில் தலைமை நிறுவனம் 49.14% பங்குகளை வைத்திருக்கும். எனவே ஷேர் ஹோல்டிங்கில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.

ஏற்கெனவே உள்ள ஆயில்-டு-கெமிக்கல்ஸ் தொழில் குழு புதிதாக உருவாக்கப்பட்ட துணை நிறுவனத்துக்குச் சென்று விடும். ஆனால் இதனால் ரொக்கப் புழக்கத்திலோ வருவாயிலோ எந்த வித மாற்றமும் இருக்காது என்கிறது ஆர்.ஐ.எல். இதன் மூலம் எண்ணெய் சுத்திகரிப்பு, மார்க்கெட்டிங் மற்றும் பெட்ரோகெமிக்கல் சொத்துக்கள் ஆயில்-டு-கெமிக்கல்ஸ் துணை நிறுவனத்துக்கு மாற்றப்படுகிறது.

இதன் மூலம் சவுதி ஆரம்கோ நிறுவனத்துடன் கூடிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வசதி வாய்ப்புகள் கூடும் என்பதோடு ஒரு தனி மதிப்பை உருவாக்க முடியும் என்கிறது ரிலையன்ஸ். இதன் மூலம் முதலீட்டை ஈர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவமனான சவுதியின் ஆரம்கோ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆயில்-டு-கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகளை எடுத்துக் கொள்ளும் நடைமுறையில் இருந்து வருகிறது.ஆர்.ஐ.எல்.நிறுவனமும் இந்த O2C வர்த்தகத்துக்கான வட்டியுடைய 25 பில்லியன் டாலர்கள் கடனை நீட்டித்துள்ளது. O2C வர்த்தகக் கடன், நிறுவனத்துக்குள் அயல்நாட்டு முதலீடு வந்தவுடன் அடைக்கப்படும்.

இப்படி தங்கள் O2C வர்த்தகத்தை மாற்றி அமைக்க செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டு அனுமதியளித்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் கடன்தாரர்களிடமிருந்தும், பங்குதாரர்களிடமிருந்தும் இதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை. மேலும் வருமான வரித்துறை, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் இன்னும் அனுமதியளிக்கவில்லை.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் வென்ச்சர்ஸில் ஆர்.ஐ.எல்-ன் பங்கு 85.1% ஆக இருக்கும். ஜியோவில் ஆர்.ஐ.எல்-ன் பங்கு 67.3% ஆக இருக்கும். கூறப்படும் இந்த O2C வர்த்தகத்தில் எரிபொருள் சில்லரை விற்பனை நிலையங்களும் அடங்கும் இதில் ஆர்.ஐ.எல்-ன் பங்கு 51% ஆக இருக்கும். மீதி 49% பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துடையாதாக இருக்கும்.

இதன் மூலம் ஆர்.ஐ.எல். மற்றும் அதன் O2C நிறுவனம் சேர்ந்து 2035 ஜீரோ கார்பன் இலக்கை எட்ட பாடுபடும். இதனைச் செயல்படுத்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் ரிலையன்ஸ் முதலீடு செய்கிறது. இதன் மூலம் கரியமில வாயுவை பயனுள்ள வேறு பொருட்களாக மாற்றப்படும். இதன் மூலம் மரபான கார்பன் அடிப்படையிலான எரிபொருளிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாற்றமடையும்.

தனி துணை நிறுவனமாக்கம் என்பது ஏற்கெனவே இருக்கும் சொத்துக்களை பணமாக்கம் செய்வதற்கும் புது எரிசக்தியின் உற்பத்திப் பெருக்கத்துக்கும் வழிவகுக்கும் என்று மோர்கன் – ஸ்டான்லி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகரக் கடன் 5 பில்லியன் டாலர்களாகும். நடப்பு அல்லாத கடன்கள் 11 பில்லியன் டாலர்களாகும்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…