ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

2021-2022 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, தங்கத்தின் மீதான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,457 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து, கிராமானது ரூ.4,468 க்கு விற்பனையாகிறது. இதனால், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 35,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை, கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து 75,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…