ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு
திருச்செந்தூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தூத்துக்குடி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் தங்க தேர் இழுத்து வழிபாடு
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி தமிழக முழுவதும் மிகச் சிறப்பாக ரசிகர்கள் கொண்டாட உள்ள நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலமுடன் நீடூழி வாழ வேண்டி இன்று திருச்செந்தூர் ஆறுபடை வீடு இரண்டாம் படை வீடான தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமான் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வானது தூத்துக்குடி ரஜினி காந்த் ரசிகர் மன்றம் சக்தி முருகன் மற்றும் பெரிய சுவாமி நாதன் தலைமையில் ரஜினி காந்த் நற்பணி மன்றத்தினை சேர்ந்த விஜய் ஆனந்த் பாபா ஜெயபால் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் , திருச்செந்தூர் ஒன்றிய நிர்வாகிகள் காயல்பட்டினம் மற்றும் உடன்குடி நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கோவில் பட்டி நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர் தொடர்ந்து கோவிலில் உள்ள பக்தர்களுக்கு தூத்துக்குடி ரஜினி காந்த் நற்பணி மன்றம் சார்பில் இனிப்பு பொங்கல் வழங்கி கொண்டாடினர்.