உலக நாயகன் பிறந்த நாளுக்கு முத்தத்தால் ஓவியம் வரைந்து அசத்திய ரசிகர்

உலக நாயகன் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தால் ஓவியம் வரைந்து பரிசளிக்கும் ஓவியர் ராஜா லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி முத்தம் தந்தவாரு ஓவியம் வரைந்து அசத்தல்
தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் தலைசிறந்த நடிகராக போற்றப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன். நடிகர் மட்டுமின்றி சினிமாவில் இயக்குனர்கள் கிட்ட ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கும் உலக நாயகனுக்கு உலகம் எங்கிலும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் அன்பு மழை பொழிவார்கள்.
இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் ராஜா வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இருக்கின்றார். ஓவியர் ராஜா லிப்ஸ்டிக் உதட்டில் தடவி கமல் உருவத்தை முத்தத்தால் வரைந்திருக்கின்றார். கட்டிப்பிடி வைத்தியம் கற்றுத் தந்த உலக நாயகனுக்கு அன்பு முத்தம் தரவே இது போன்ற ஓவியத்தை வரைந்ததாக ஓவியர் ராஜா தெரிவித்திருக்கின்றார் .
உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்று இதனை அவருக்கு பரிசாக தரவும் காத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்