பிரபல நடிகரின் உருவம் பதித்த  ₹100 நாணயத்தை போட்டிபோட்டு வாங்கி செல்லும் ரசிகர்கள்

குடியரசு தலைவர் திரெபதி முர்முவால் வெளியிடப்பட்ட  என்.டி.ஆர் உருவம் பதித்த  ₹.100 காசுகளுக்காக நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்லும் ரசிகர்கள்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான நந்தமுரி தாரக ராமராவ் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி,  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் வெளியிடப்பட்ட ₹ 100 நினைவு நாணயம் ஐதராபாத் நகரில் விற்பனை தொடங்கியது.  

இந்த நாணயத்தை பெற என்டிஆர் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி செல்கின்றனர். ஹைதராபாத் மற்றும் சைபாபாத் மிண்ட் மியூசியத்தில் நாணயங்களை வாங்குவதற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் நீண்ட  வரிசையில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று என்.டி.ஆர். உருவம் பதித்த  காசுகளை வாங்குகிறார்கள்.  

என்டிஆர் ₹ 100  நினைவு நாணயம்  ₹.4,850, ₹4,380, ₹.4,050 ஆகிய மூன்று  விதமான விலையில் அதிகாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.  என்.டி.ஆர் நாணயம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *