ஜெயிலர்: மாணவர், மாணவிகள் திரையரங்கில் காவாலா பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி 600-கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் 20-வது நாளை முன்னிட்டு கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாட்டில் நடன மாணவர், மாணவிகள் திரையரங்கில் காவாலா படலுக்கு நடனமாடி கொண்டாட்டம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10-ம் தேதி ஜெயிலர்  திரைப்படம்  வெளியாகி மாபெரும் வெற்றிபெற்று சுமார் 600-கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் 20-வது நாளை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 தூத்துக்குடி-யில் மாவட்ட தலைமை  நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின்  ஏற்பாட்டில் தூத்துக்குடி KSPS கணபதி கலையரங்கம் திரையரங்கில் திரைப்படம் தொடங்கும் முன் ரசிகர்கள் மத்தியில் கிரிட்டி டான்ஸ் அகடமி சார்பில் மாணவர், மாணவிகள் காவாலா பாடல் காட்சிக்கு திரையரங்கு-குள் டான்ஸ் ஆடி ஜெயிலர் படம் பார்க்க வந்த  அனைத்து ரசிகர்களின் கவனைத்தையும் ஈர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *