“நீ இல்லாத உலகத்திலே” உலுக்கிய தங்கமகன் இராகவேந்திரன்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் எபிசோடு முடிவில் சிறப்பாக பேசியவர்களுக்கு 5000 மதிப்பிலான கூப்பனும், மிகச்சிறப்பாக பேசிய ஒருவருக்கு தங்க ஒலி வாங்கி பரிசாகவும் வழங்கப்படுகிறது.அதே போல் இந்த வாரமும் பரிசு கூப்பனும் தங்க ஒலி வாங்கியும் வழங்கப்பட்டது.மற்ற வாரங்களில் தங்க ஒலிவாங்கி வாங்கிய பேச்சாளர்களுக்கும் இந்த வாரம் தங்க ஒலி வாங்கி பெற்ற பேச்சாளர்க்கும் ஒரு தனித்துவம் உள்ளது.

“நீ இல்லாத உலகத்திலே” என்ற தலைப்பில் மனைவி இல்லாமல் ஒரு கிழவன் புலம்புவதாக இராகவேந்திரன் பேசினார். அவருடைய பேச்சு கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கியது என்று சொல்லலாம்.முதலில் வலையொளி பக்கத்தில் பேச்சு வந்துவிடுகிறது. பிறகு தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இராகவேந்திரனின் பேச்சு வலையொளியில் வந்ததும் பார்த்த ஒவ்வொரு பார்வையாளரும் இந்த முறை நீங்க தான் பரிசு வாங்குவீர்கள் என்ற வாழ்த்து செய்தியையும், கண்கலங்கிட்டேன் என்ற உணர்வையும் அதிகமாக பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு பலருடைய எண்ணம் இந்த முறை பரிசு இராகவேந்திரன் தான் என்றும் உணர வைத்தது.பேச்சு ஒரு வாரமும் நிகழ்ச்சியின் பரிசு மற்றொரு வாரமும் ஒளிபரப்பப்பட்டாலும் மக்கள் மனதில் தன் பேச்சால் வென்றுவிட்டார் இராகவேந்திரன்.மற்ற வாரங்களில் வென்றவர்களுக்கும் இந்த வாரம் வென்றவருக்குமான தனித்துவம் இதுவே.

பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெட்டி.ஒட்டி வந்தாலும் விஜய் தொலைக்காட்சி மிகச்சிறப்பாக இராகவேந்திரன் பேசிய பிறகு நடுவர்கள், தொகுப்பாளர்கள்,சக போட்டியாளர்கள் மெளனமாக இருந்ததையும், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மெளனமாக இருந்ததை நடுவர்கள் குறிப்பிட்டு சொன்னதையும் அப்படியே ஒளிபரப்பியது நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்திவிட்டது.

இவ்வுலகில் வார்த்தையால் வெளிபடுத்த முடியாத சில விடயங்களை உணர்வுகளால் கடத்துவோம்..அப்படிப்பட்ட ,சொல்ல முடியாத உணர்வுகளை முதல் முறை வார்த்தையால் உரக்க பேசி உரைய வைத்த இராகவேந்திரனுக்கும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சிக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *