தல என்றால் தோனி தான்… வேறு யாருக்கும் தகுதி இல்லை… ஏ.கேவை சீண்டும் செல்லூர் ராஜூ…!

வாடிப்பட்டி, மே 26: நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெறுமென தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தல தான் ஜெயிப்பார் தலை என்றால் தோனி தான் தல தல என கூறிக் கொள்பவர்கள் இல்லை என நடிகர் அஜித்குமாரை மறைமுகமாக தாக்கி பேசினார் 

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளதால் தான் நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பு விடுத்திருக்க வாய்ப்பில்லை என கூறியவர் பிரதமர் மோடி நமக்கு கிடைத்த பெருமை அவரை பல நாட்டு பிரதமர்கள் புகழ்கிறார்கள், காலில் விழ வருகிறார்கள் என பிரதமரை புகழ்ந்து பேசினார். திமுக நாடாளுமன்ற திறப்புவிழாவில் பங்கேற்க வேண்டுமென கூறினார். 

ஐபிஎல் குறித்து பேசிய போது நடைபெறுகிற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும், தல வெற்றி பெறுவார் தலை என்றால் தோனி தான் மற்றபடி தல தல என சொல்லுபவர்கள் எல்லாம் தல இல்லை என நடிகர் அஜித்தை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *