ஹீரோ வில்லன் மற்றும் காமெடியன் கவுண்டமணி – கணேசகுமாரன்

நான் பாடும் பாடல் படத்தில் கவுண்டமணி பேசிய வசனம் போலவே சூடு வச்சாலும் சரி அடுப்பு மேல ஏத்தி ஒக்கார வச்சாலும் சரி கவுண்டன் கவுண்டன் தான். ஆமாம் நகைச்சுவை பாத்திரங்களிலேயே நிறைய வித்தியாசமான தோற்றங்களில் வந்தவர் கதை நாயகனாக நடித்தபோதும் கவுண்டன் கவுண்டனாகவே வந்தார். பல வெள்ளிவிழா படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் அவரும் இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், நான் பாடும் பாடல், சின்னக் கவுண்டர், சின்னத் தம்பி, உள்ளத்தை அள்ளித்தா படங்களின் வெற்றியில் கவுண்டமணியின் காமெடியும் இருந்தது.

சின்னச்சின்ன வேடங்களில் 60 களிலேயே நடிக்கத் தொடங்கியிருந்தாலும் 77 ல் வெளியான பதினாறு வயதினிலே படத்தில் அவருடைய நிஜப்பெயரான சுப்ரமணியன் என்ற பெயரில் அவர் ஏற்ற வேடமே யாரிந்த கவுண்டமணி என்று தனித்து அடையாளம் காணத் தொடங்கியது. தொடர்ந்து பாரதிராஜாவின் படங்களில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இருந்தும் பல படங்கள் கடந்து பயணங்கள் முடிவதில்லை படத்தில்தான் அவரின் நகைச்சுவை ரசிக்கப்பட்டது. தொடர்ந்து நான் பாடும் பாடல் பயணம், மலையூர் மம்பட்டியான் என்று நகைச்சுவை தாண்டி அவருக்கென்று கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள் இயக்குநர்கள்.

பிறந்தேன் வளர்ந்தேன் அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம். தேவர் பிலிம்ஸ் தயாரித்த படத்தில் நாயகி ஜீவிதாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து தன்னை ஹீரோவாய் நிலைநாட்ட முயன்றாலும் உடன் நடித்த அத்தனை பேர்களையும் அவர் பாணியில் கலாய்க்கத் தவறவில்லை. கவுண்டமணி ஹீரோவாய் நடித்த இன்னொரு படமான ராஜா எங்க ராஜா படத்தில் அவர் காமெடி புகழ் பாடி டைட்டில் சாங் வந்தது. படத்துக்கு இசை இளையராஜா. தானும் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் ஆசையில் தன் வழக்கமான நையாண்டி விடுத்து சீரியஸாக நடித்தார்.

குதிரை வண்டிக்காரனாக சென்னை பாஷை பேசி ஒரு கவுண்டமணியும் போலீஸாக இன்னொரு கவுண்டமணியும் இரு வேடங்களில் நாயகனாக நடித்து வெளியான ஒரு நல்லவன் ஒரு வல்லவன் புகழ்பெற்ற இயக்குநர் இராம. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்தது. இப்போதைய ஹீரோக்கள் போல பல கெட்டப்களில் வந்து டிஸ்கோ சாந்தியுடன் குத்து டான்ஸ் ஆடி கடத்தல்காரர்களைப் பிடிக்கும் ஸ்ட்ரிக்ட் போலீஸ் வேடம். டான்ஸ் சண்டை என்று கவுண்டமணி பாடுபட்டாலும் கெளரவ தோற்றத்தில் வந்த கங்கா ஜீவிதா ஜோடிக்கான மயிலா மானா பாடல் அப்போதைய ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் ஆனது.

இயக்குநர் வி. சேகரின் ஆஸ்தான ஹீரோவாக சில படங்களில் கவுண்டமணி நடித்தார். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், புகுந்த வீடா பொறந்த வீடா படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நகைச்சுவை தாண்டி குணசித்திர கதாபாத்திரங்களிலும் ஜொலித்தார்.

வில்லனாகவும் சில படங்களில் வலம் வந்தார். ரகசிய போலீஸ், முள் இல்லாத ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, எங்க ஊரு ராசாத்தி போன்ற படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வில்லனாய் புதிய வார்ப்புகள் படத்தில் நாயகி ரத்தியை திருமணம் செய்துகொண்டு ஹீரோ பாக்யராஜுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தந்தார். எங்க ஊரு ராசாத்தியில் ராதிகாவை பெண்டாள நினைக்கும் மைனர் கதாபாத்திரம். காதலிச்சவன் துணிய வெட்டுறவன் கட்டிக்கிட்டவன் துணிய கிழிக்கிறவன் என்றபடி டார்ச்சர் தரும் இடத்தில் அசல் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். நகைச்சுவை நடிப்பில் ஹீரோவாக மட்டுமல்ல; வில்லனாகவும் அசத்திய கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…