அமைச்சரவை மாற்றம் விவகாரம்- யார் அந்த கருப்பு ஆடு? ஸ்டாலின் கோபம்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் முன்கூட்டியே ஊடகங்களிலும், சமூகவலைதளப் பக்கங்களிலும் கசிந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிகழ்ந்த அமைச்சரவை மாற்றம் குறித்த தகவலோ, அல்லது அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கும் தகவலோ எள்ளளவும் வெளியே கசிந்த வரலாறு இல்லை.பேப்பரை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய சூழல் தான் அன்று நிலவியது. ஆனால் இன்றைய சூழலில் அமைச்சரவையில் அவருக்கு அந்த துறை, இவருக்கு இந்த துறை என்ற தகவல் முன் கூட்டியே வெளியாகி முதல்வர் தரப்பை அதிர்ச்சி அடைய வைக்கிறது.இப்போது கூட அமைச்சரவையில் 4 பேருடைய துறையில் மாற்றம் நிகழும் என்றும் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் வெளியே கசிந்ததையும் முதல்வர் தரப்பு விரும்பவில்லை.அமைச்சரவை மாற்றத்தை பொறுத்தவரை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்படும் முடிவாகும்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் யூகத்தின் அடிப்படையில் கடந்த 2 வாரங்களாக உலா வந்தன. அந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் இது போன்ற தகவல் வெறும் வதந்தி என்பதை உணர்த்தும் வகையிலும் ஸ்டாலின் நேற்றைய தினம் ஒரு முடிவெடுத்திருந்தார்.அதேபோல் அமைச்சர் பதவயிலிருந்து கயல்விழி செல்வராஜ், ராமச்சந்திரன் போன்றோரும் நீக்கப்படலாம் என ஒரு தகவல் உலா வந்தன. ஆனால் அவற்றையும் வதந்தி என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் வகிக்கும் பதவி மீது முதல்வர் கைவைக்கவில்லை.இதனிடையே அமைச்சர் பதவியிலிருந்து நாசர் நீக்கம் தற்காலிகம் என்றும் ஒரு வருடத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *