‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிவு  செய்ய வேண்டும்…இஸ்லாமிய கூட்டமைப்பு! 

தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் எடுக்கும் திரைப்படம்  இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிவு  செய்ய வேண்டும் மேலும் திரைப்படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தீர்மானம்.

தூத்துக்குடி ஒன்றிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி ஏரல் காயல்பட்டினம் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் இந்தியாவில்  இஸ்லாமியர்கள் மனது புண்படும் வகையிலும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மத நம்பிக்கையை தவறாக சித்தரித்து திரைப்படங்களை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில்  எடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இதுபோல் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்து திரைப்படத்தை வெளியிட்ட தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தூத்துக்குடி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

 உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *