பழைய மாணவர்கள் சந்திப்பு….காதலர்கள் இருவர் எஸ்கேப்பு….

வெங்கட்ராம்

விஜய் சேதுபதியும் திரிஷாவும் நடித்து வெளியான 96 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் படத்தை கொண்டாடினர். ஆனால் அந்தப் படத்தின் தாக்கம் அளவுக்கு மீறி சென்று விட்டதோ என்று ஐயம் ஏற்படுகிறது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் பள்ளிப் பருவ நண்பர்களோடு சேர்ந்து நடத்திய ஒரு நினைவு கூறும் நிகழ்ச்சியில் சந்தித்து தங்களது பள்ளிப் பருவ காதலின் நினைவுகளை பகிர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கேரளாவிலும் நடந்துள்ளது. சுவாரசியம் என்னவென்றால் அது கொஞ்சம் அதிகமாகவே சென்று விட்டது. கேரளாவைச் சேர்ந்த சிலர் 35 வருடம் கழித்து தங்களது பள்ளி நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க ஏற்பாடு செய்தனர். அனைவரும் அதில் கலந்து கொண்டு தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். அதில் சந்தித்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களது பள்ளிப் பருவ காதலை நினைவுகூர்ந்து மகிழ்ந்துள்ளனர். ஆனால் பெற்றோர்கள் அவர்களுக்கு வெவ்வேறு நபர்களுடன் திருமணம் நடத்தி வைத்து விட்டனர். பழைய காதல் நினைவுகள் அளவுக்கு மீறி அவர்களை தாக்க, அவர்களை தற்போது ஒன்றாக சேர்க்க, அவர்கள் கைகளை கோர்க்க, திடீரென்று தலை மறைவு ஆக்க, குடும்பங்கள் அவர்களை தேடி தேடி வேர்க்க, கடைசியில் போலீசை பார்க்க, தற்போது தேடல் நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *