‘தி எலிஃப்ன்ட் விஸ்பரர்ஸ்’, ‘ஆர்ஆர்ஆர்’ பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது!

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், எங் டைகர் என்.டி.ஆர் மற்றும் மெகாபவர் ஸ்டார் ராம் சரண் ஹீரோக்கள் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தனய்யா தயாரித்திருந்தார். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், மார்ச் 25, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூலில் மெகா சாதனை படைத்தது.

மேலும், உலகம் முழுவதும் பல புகழ்பெற்ற விருதுகளையும் வென்றுள்ளது. ஆர்ஆர்ஆர்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல விருதுகளையும் வெகுமதிகளையும் பெற்று வருகிறது. மேலும், இந்தப் படம் ஆஸ்கார் விருதையும் வென்று புதிய அத்தியாயத்தை எழுதியது

ஆர்ஆர்ஆர் அசல் பாடல் பிரிவில் பாடலுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது இந்தப் பாடலுடன் மேலும் நான்கு பாடல்கள் ‘அப்லாஸ்’ (டெல் இட் லைக் ஏ வுமேன்), ஹோல்ட் மை ஹேண்ட் (டாப்கன்: மார்வெரிக்), லிஃப்ட் மீ அப் (பிளாக் பாந்தர்) மற்றும் தி இஸ் எ லைஃப் (எவ்ரிதிங் எவ்ரிதிங் ஆல் அட் ஒன்ஸ்) ஆகியவையும் பரிந்துரைக்கப்பட்டன.

முன்னணி இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க, சந்திரபோஸ் பாடல்களை எழுதியிருந்தார். இந்த விருது மூலமாக தமிழ் சினிமா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணக் குறும்படம், ஆஸ்கர் வென்றிருப்பது தமிழ் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது. ‘யானை’ எனும் பேருயிரை குழந்தையாக பாவித்து பார்த்துக் கொள்ளும் பெல்லி அம்மாவின் நடிப்பும், பழங்குடியின மக்களின் இயல்பான மொழி, அழகான காட்சி அமைப்பு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என பல விஷயங்கள் இந்த படத்தில் பேசு பொருளாக அமைந்தது. ஆஸ்கர் விருதை வென்று சாதித்துள்ள இந்த ஆவணப் படத்தை இயக்கிய உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

RRR தற்போது 95வது அகாடமி விருதை வென்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *