நடிகர் சிம்புக்கு ரசிகர்கள் முன்னிலையில் விரைவில் திருமணம்…!

பத்து தல திரைப்படம் வெற்றிபெற மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து கூல் சுரேஷ் வழிபாடு; விரைவில் ரசிகர்கள் முன்னிலையில் சிம்புவிற்கு திருமணம் நடைபெறும்*

திரைப்பட நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு நடத்தி 108 தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்டார். தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் பொதுமக்கள் கூல் சுரேஷ் உடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இது குறித்துக்கொள் சுரேஷ் கூறும் போது பத்துதல திரைப்படம் வெற்றி பெற வேண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். திரைப்படம் படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல..! சிம்பு ரசிகர்கள் கெத்து தல..! என்றார்.

நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு நடிகர் சிம்புவிற்கு திருமணம் ஒன்று நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடக்கும். அப்படியாகவே டி. ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *