#RIP பழம்பெரும் நடிகர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக மரணம்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பழம்பெரும் நடிகர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் எண்ணற்ற படங்களை இயக்கி  நடித்த இயக்குனர் கே. விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக இறந்தார். கலா தபஸ்வி’ என அழைக்கப்படும்  கே.விஸ்வநாத் 19.2.1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. தமிழில் குருதிப்புனல், அஜித்துடன் முகவரி, பார்த்திபன் நடித்த ‘காக்கைச் சிறகினிலே, விஜய் நடித்த ‘பகவதி’ நயன்தாரா மற்றும் தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறைக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. தமிழில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, ‘சொல்லி விடவா’ என்கிற படத்திலும் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்பட இயக்கம், நடிப்பை தாண்டி, ஆடியோ கிராபர், ஸ்க்ரீன் பிளே ரைட்டர், என பன்முக திறமையோடு விளங்கியவர் கே.விஸ்வநாத். மேலும் பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கி விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 

எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டுவந்த இவர், தன்னுடைய 93 வயதில்  ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் மரணம் அடைந்தார். 

இதை தொடர்ந்து திரை உலகை சேர்ந்த பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். பல பிரபங்கள் இவரின் இழப்பு திரையுலகில் ஈடு செய்யமுடியாத இழப்பு என கூறிவருகிறார்கள். ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *