ரெட் ஜெயன்ட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட உதயநிதி…!

தமிழ் திரையுலகில் 2008-ல் வெளியான குருவி திரைப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக உதயமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிப்பதும், வெளியிடுவதுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடைசியாக இதன் தயாரிப்பில் கலகத் தலைவன் திரைப்படமும், வெளியீட்டில் கட்டா குஸ்தி திரைப்படமும் திரைக்கு வந்தன.

அதுவரை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன விளம்பரங்களில் ‘உதயநிதி ஸ்டாலின் வழங்கும்’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் உதயநிதி, அமைச்சராக பொறுப்பேற்ற பின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன சார்பாக வெளியாகும் விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அமைச்சரானதால் ‘உதயநிதி ஸ்டாலின் வழங்கும்’ என்ற வாசகம் விளம்பரங்களில் வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் இனி இந்நிறுவனத்தின் விளம்பரங்களில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் Logo மட்டுமே இடம்பெற்று வருகிறது. நேற்று வெளியான ‘வாரிசு’ படத்தின் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையாளர்களை பற்றிய வீடியோவில் கூட ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற Logo மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதே போல பிரபு சாலமனின் ‘செம்பி’ திரைப்படத்தில் விளம்பரங்களிலும் Logo மட்டுமே உள்ளது. 

கடையாக வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் தற்போதைய விளம்பரங்களிலும் Logo மட்டுமே இருக்கிறது. அதே போல ‘துணிவு’ படத்தின் ‘காசேதான் கடவுளடா’ என்ற 2-ம் பாடலுக்கான அறிவிப்பு போஸ்டரிலும் உதயநிதி பெயர் நீக்கப்பட்டு Logo மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *