‘வாரிசு’ படத்தை தான் முதலில் பார்ப்பேன் – ‘துணிவு’ பட இயக்குநர் எச்.வினோத் ஓபன் டாக்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதே போல, விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. 

கிட்டத்தட்ட விஜய், அஜித்தின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக மோத உள்ளதால் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் 2 படங்களின் தயாரிப்பு நிறுவனமும் மாறி, மாறி தங்களது புரோமோஷன் பணிகளை மும்முரமாக நடத்தி வருகின்றன.

இந்நிலையில் துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத், தனியார் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்தைதான் முதலில் பார்ப்பேன் என கூறியுள்ளார். எதற்காக என்று பார்த்தால், ‘துணிவு’ படத்தை பலமுறை பார்த்து விட்டதாகவும், பார்க்காதது ‘வாரிசு’ திரைப்படம்தான். அதனால் ‘வாரிசு’ படத்தைதான் முதலில் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். 

இதேபோல கடந்த 2017 தீபாவளிக்கு (அக்டோபர் 18-ம் தேதி) விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் திரைக்கு வந்தது. அதேநாளில் ரத்னகுமார் இயக்கத்தில் ‘மேயாத மான்’ திரைப்படம் வெளியானது. இயக்குநர் ரத்னகுமாரும், முதல் நாள் முதல் காட்சியாக (FDFS) விஜய்யின் மெர்சல் திரைப்படத்தை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *