அடி தூள்!! வசூலில் சாதனை படைக்கும் நானே வருவேன்..!!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்‘நானே வருவேன்’.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் கூட்டணியில் உருவான இப்படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

குறிப்பாக திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படமானது கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதோடு தனுஷ் இரட்டை வேடங்களில் ஒரு எட்ஜ் ஆஃப் தி சீட் த்ரில்லரை வழங்குவார் என தெரிகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் மீண்டும் இணைகிறார்.

அதே சமயம் ​​படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழுடன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் படமானது நேற்றைய தினத்தில் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, ஒரு நாளில் மட்டும் 10.1 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *