திருச்சிற்றம்பலம் படத்தின் மாஸ் அப்டேட்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.

இந்த படத்தில் நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

அதே சமயம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸானது. குறிப்பாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில் உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

அதன் ஒருபகுதியாக நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்த நிலையில் முதல் வாரம் மட்டும் ரூ.51.42 கோடி ரூபாயை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன் படி, மேகம் கருக்காதா பாடலானது 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று முதல் சன் நெக்ஸ்ட்டில் திருச்சிற்றம்பலம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *