நடிகர் விஷாலின் கடன் பாக்கி வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

லைக்கா நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வழக்கில் நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புகாக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

அப்போது விஷால் வாங்கிய கடனை லைக்கா நிறுவனம் செலுத்துவதாக கூறியிருந்தது. அதோடு கடன் தொகையை தங்கள் நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தும் வரை நடிகர் விஷாலின் அனைத்து படங்களில் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த சூழலில் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முன்றதால், படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைக்கு தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

அப்போது லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்கவே சினிமாவில் நடித்து வருவதாக கூறினார்.

அப்போது விஷாலின் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என கோரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் இந்த மனுவை விசாரிப்பதாக கூறி, விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *