அஜித்தின் துணிவு படத்தின் மாஸான அப்டேட்!! தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று முதல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் அஜித். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் ‘வலிமை’.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஏகே61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

இந்த சூழலில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர் போன்றோர் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. “AK 61” திரைப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து “AK 61” திரைப்படத்திலும் ஹெச் வினோத்துடன் உருவாகும் இப்படம் மூன்றெழுத்து டைட்டில்களில் உருவாகும் என கூறப்பட்டது.

தற்போது “AK 61” திரைப்படத்திற்கு நேற்றைய தினம் துணிவு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, தற்போழுது படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *