6 விருதுகளை அள்ளிய ‘ஸ்க்விட் கேம்’… கெத்து காட்டிய கொரியன் வெப் தொடர்!

Squid Game

உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸ் சிறந்த நடிகர் உட்பட 6 எம்மி விருதுகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு ‘எம்மி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. டிவி நிகழ்ச்சிகளின் ஆஸ்கார் என்றழைக்கப்படும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸில் ஒளிப்பரப்பான ‘ஸ்க்விட் கேம் ‘சீரிஸ் சிறந்த நடிகர், இயக்கம் உள்ளிட்ட 14 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, இதில் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த விஷுவல் எஃபெக்ட்க்ஸ் உள்ளிட்ட 6 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த லீ ஜுங் ஜேவுக்கும், டிராமா தொடருக்கான சிறந்த இயக்குநர் விருது ஸ்க்விட் கேம்’ தொடருக்காக ஹ்வாங் டோங்-ஹ்யுக்-க்கு இந்த விருதை பெற்றுள்ளனர். இருவரும் இந்த பிரிவுகளின் கீழ் விருது பெறும் முதல் ஆசியாவைச் சேர்ந்த கலைஞர்க்ள் ஆவார்கள்.

கொரியன் வெப் தொடருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், ‘ஸ்க்விட் கேம்’ 6 விருதுகளை பெற்றது சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

74வது ஆண்டு எம்மி விருதுகள் கெனன் தாம்ஸனால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் திரையரங்கில் நடத்தப்பட்டது. செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *