ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடியா? விஜய்யின் ’வாரிசு’படத்தின் மாஸ் அப்டேட்!!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன் முறையாக தளபதியுடன் ஜோடிப்போட்டு உள்ளார்.

அதே போல் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துன் வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படமானது தமன் இசையமைக்க உள்ளார். தற்போது வாரிசு திரைப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாகவும், ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *