வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்: லைகா வெளியிட்ட போஸ்டர்..!! 

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்களும், ஊடகங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ்  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

லைகா தயாரிப்பு நிறுவனத்தில் வெளியான இந்த போஸ்டரில், ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் காமடி ஐகான் வைகை புயல் வடிவேலு. இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்’ என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ளது.

14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள் லைகா புரொடக்சன்ஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை, டிரெய்லர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *