மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்: குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

அதொடு 2023-ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படம் ரீலிஸ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் குறித்து இணையத்தில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, சௌந்தர்யா ரஜினிகாந்த்-க்கு தற்போது 2-வது ஆண்குழந்தை பிறந்து இருப்பதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இறைவன் அருளாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தாலும் தனக்கு குழந்தை பிறந்ததுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே போல் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு வளைகாப்பு நடைபெற்று புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *