திரையுலகமே அதிர்ச்சி!! பிரபல நடிகர் கிருஷ்ணம் ராஜூ மரணம்!!

பழம்பெரும் தெலுங்கு நடிகர் உப்பளபதி கிருஷ்ணம் ராஜு இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1940-ம் ஆண்டு பிறந்த இவர் சிலக்கா கோரிங்கா என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். இவர் காதல் முதல் தொடங்கி புராண கதைகள் வரையில் திரைப்படங்களில் நடித்தார்.

அதன் படி அமர தீபம், சீதா ராமுலு, கடகத்தால ருத்ரையா போன்ற படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். அதே போல் ஆந்திராவின் நந்தி விருதை வென்ற இவருக்கு 1986 இல் ‘தந்திர பாபராயுடு’ படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.

அதே போல் 1991ல் நரசாபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட இவர் 1999 தேர்தலில் பாஜக வேட்பாளராக மாறினார். பின்னர் அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்று 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் இளைய அமைச்சராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தன்னுடைய 83-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *