அடி தூள்! இணையத்தில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்-1 படத்தின் டிரைலர்!!

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தினை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அதே போல் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி,பார்த்திபன், ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் படமானது வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இதன் காரணமாக நேற்றைய தினத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் இசை வெளியீட்டு விழா கோலாகமாக நடைப்பெற்றது. அதே போல் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி, சோழா சோழா என இரு பாடல்கள் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *