அடி தூள்!! நானே வருவேன் முதல் ஆடியோ பாடல் வெளியீடு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ். இவரின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். அந்த வகையில் தற்போது வரவிருக்கும் நானே வருவேன் விரைவில் வெளியாகவுள்ளது.

குறிப்பாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அதோடு இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதே போல் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் நானே வருவேன் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள முதல் பாடலானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *