அட்ராசக்க! ரிலீஸுக்கு முன்னாடி இப்படி ஒரு சாதனையா? வெந்து தணிந்தது காடு படத்தின் மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் செம்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பாடல் வெளியீட்டு விழா கோலாகமாக நடைப்பெற்றது.

அதே போல் ஆடியோ மற்றும் டிரெய்லர் விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார். தற்போது வெந்து தணிந்தது படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, படத்தின் டிரைலர் 14 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *