இனிமேல் உங்க பெயர் டாக்டர் யுவன்: டாக்டர் பட்டம்  வாங்கிய யுவன்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகருமான சதீஷ் ரெட்டி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் திரைப்படத்துறையில் பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளராக சாதனை படைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த 31 வது பட்டமளிப்பு விழாவில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2258 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  டாக்டர் பட்டம் வாங்கிய யுவன் க்கு திரைத்துறையை சேர்ந்த பலரும்  வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *