நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் பைக் பயணம்..! 

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார். இந்தப் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. அந்த ஷூட்டிங் நிறைவு செய்தவுடன் தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.  

இதில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் ஏகே 61 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி என பலர் நடித்து வருகின்றனர். 

அஜித்துடன் இமயமலையில் பைக் பயணம்: மஞ்சுவாரியர் என்ன சொல்லியிருக்கார்  பாருங்க! - தமிழ் News - IndiaGlitz.com

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி பகுதியில் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

இந்தப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் அவர்களுக்கு நன்றி. பயணங்களில் அதிக ஆர்வம் கொண்ட நான் நான்கு சக்கர வாகனத்தில் பல கிலோமீட்டர்கள் பயணித்திருக்கிறேன். முதல்முறையாக டூவீலரில் ஒரு டூர் வந்திருக்கிறேன். இதற்கு காரணமான சக பயணிகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *