‘கோப்ரா’ படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் – படக்குழு அறிவிப்பு!

விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பிரபலம் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். அதே போல் வில்லன் கதாப்பாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிய இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கோப்ரா படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் நீக்க வேண்டும் என ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கோப்ரா படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளனர்.

அதோடு திருத்தப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறியுள்ளனர். மேலும், பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *