சர்ச்சை கருத்து: நடிகர் கமல் ஆர் கான் கைது..!! உண்மை என்ன..?

கடந்த 2020 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பகிர்ந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான கமல் ஆர் கான் மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கமல் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்து விடக் கூடாது. ஒயின் ஷாப்கள் விரைவில் திறக்கப்பட இருக்கின்றன என்று பதிவிட்டிருந்தார். 

அதேபோல் இர்ஃபான் கான் பற்றியும் அவர் சர்ச்சைக் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். ஏப்ரல் 29 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் அரிய வகை புற்றுநோயால் உயிரிழந்தார். அடுத்த 24 மணி நேரத்தில் ஏப்ரல் 30 ல் பிரபல மூத்த நடிகர் ரிஷி கபூர் மறைந்தார்.

பாலிவுட்டின் இரண்டு ஜாம்பவான்கள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழக்க, இரு கலைஞர்களையும் அவர்களின் மறைவை ஒட்டி தரக்குறைவாக விமர்சித்ததாக யுவ சேனா அமைப்பினர் புகார் செய்துள்ளனர். 

அவர் மீது யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கனல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ரஷீத் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Mumbai Police arrest film critic KRK over 'defamatory' tweet | வெளிநாட்டில்  இருந்து மும்பை வந்த நடிகர் விமான நிலையத்தில் கைது

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை மும்பை மலாட் போலீசார் கைது செய்தனர். அவர் இன்று மும்பை போரிவில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *