இந்தி ரீமேக்கில் உருவான விக்ரம் வேதா படத்தின் டீசர் வெளியானது..!!  

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இந்த படத்தையும் இயக்கியுள்ளனர்.

கிரிஷ், தூம் 2 வார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் உருவாகி உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் வேதா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் பட புதிய போஸ்டர்,Vikram vedha hindi remake new  poster | Galatta

இந்தி விக்ரம் வேதா படத்தில் போலீஸ் அதிகாரியாக தமிழில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். இருவரும் மிரட்டும் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. 

.விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தமிழில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்கர் காயத்ரி நேரடியாக பாலிவுட்டில் விக்ரம் வேதா படத்தை எடுத்து முடித்துள்ளனர்.  செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு இந்த படம் வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *