சிறுத்தை சிவா -சூர்யா படத்தின் பூஜை இன்று தொடங்கியது!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது ‘வணங்கான்’ மற்றும் ‘வாடிவாசல்’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் தனது 42வது படத்தில் நடிக்க உள்ளார்.

குறிப்பாக முதல் முறையாக சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை அகரம் அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது.

இதில் நடிகர் சூர்யா பூஜை போடுவது போல் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா கடைசியாக சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிறுத்தை சிவா கடைசியாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து எடுத்த ‘அண்ணாதே’ திரைப்படம் சரியான வரவேற்பை பெறாததால் இப்படத்தில் கண்டிப்பாக ஹிட் கொடுக்கம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது நாளை முதல் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *