வாரிசு படத்தின் முதல் பாடல்! எப்போது வெளியாகும் தெரியுமா?

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக தளபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும், இந்த படம் 2023 பொங்கல் அன்று வெளியாக இருப்பதால் படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சூழலில் வாரிசு படத்தில் 6 பாடல்கள் உள்ள நிலையில் முதல் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *