தளபதி 67 படத்தின் வில்லன் லிஸ்ட்டில் பிரபல இயக்குனர்: யார் தெரியுமா?

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருபவர் நடிகர் விஜய். இப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.

அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 2023 பொங்கலில் வெளியாகும் இப்படமானது ஃபேமிலி டிராமா என்ன பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மும்பை பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி – 67 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, டைரக்டர் கெளதம் வாசுதேவ மேனன் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் மூலம் விஜய்யுடன் கெளதம் மேனன் இணையும் முதல் படம் இதுவாக தான் இருக்கும். மேலும், படக்குழு இது குறித்து உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *