தெலுங்கு  ரசிகர்கள் செய்தது சரிதான் – நடிகை விஜயசாந்தி

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவான லால் சிங் சத்தா என்கிற படம் கடந்த வியாழனன்று வெளியானது.

இந்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய இடத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். அத்வைத் சந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டார்.ஆனால் இந்த படம் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அமீர்கான் படத்தை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது. 

Failure of Aamir Khan's film; Vijayashanthi thanked the fans

ஆமிர்கான் இதற்கு முன்னதாக நடித்த பல படங்களில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால், இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் படத்திற்கும் கூட எந்த மொழியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.தற்போது இதை சுட்டிக்காட்டி உள்ள தெலுங்கு திரையுலகில் முன்னாள் நடிகை விஜயசாந்தி, ஆமிர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு தோல்வியை பரிசளித்த எதற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *