வரலாற்றை மறந்து விட்டால் மீண்டும் அதே நாட்களுக்கு திரும்ப வேண்டியிருக்கும் – நடிகர் கமல்

வரலாற்றை மறந்து விட்டால் மீண்டும் அதே நாட்களுக்கு திரும்ப வேண்டியிருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்து குறித்து பதிவிட்டுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் இன்று வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர வாழ்த்துக்கள்.  

25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் , பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் படமாக்கப்பட்ட காட்சியில் ‘ஒரு கடலையோ, காற்றையோ, காட்டையோ குத்தகைக்கோ வாடகைக்கோ, சொந்தம் கொண்டாட முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என் கேள்வி கேட்டேன்.

Actor kamal Hassan independence day message said do not forget history of  freedom - 'சுதந்திரம் என்பது வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால் மீண்டும்  அடிமைப்பட நேரிடும்' – நடிகர் ...

என் உளத்தீ இன்னமும் அணையவில்லை.உங்களிடம் இருக்கும் இந்த தீ நீடிக்கும் வரை நம் வீடும் நாடும் மாநிலமும் ஊரும் தெருவும் சீராகும்.தியாக மறவர்கள் பலர், தங்கள் இன்னுயிரை, சொந்த வாழ்க்கையை, சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடிப் பெற்றது இந்த சுதந்திரம் என்பது நம் வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால் மீண்டும் அதே நாட்களுக்கு திரும்ப வேண்டியிருக்கும் என்பதும் வரலாறு. மறவோம். மறவோம். என்று இந்த நாளில் உறுதி கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *