லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் –  மான்டி பனேசர்

இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களை அவமானப்படுத்தும் விதமாக அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் அமைந்து இருப்பதால், அந்தப் படத்தை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

அத்வைத் சந்தன் இயக்கத்தில், அமீர்கான், கரீனா கபூர், மோனா சிங், நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஹாலிவுட்டின் கிளாசிக் படமான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. 

தொடர்ந்து அமீர்கான் படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில், இந்தப் படத்திற்கும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் எதிர்ப்பு காரணமாக, முதல் நாளில் 11.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலை ஈட்டியது. 

இந்நிலையில்தான் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர்கான் ஒரு முட்டாள் போன்று நடிக்கிறார். ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தில் ஒரு முட்டாள் கதாபாத்திரம் இருந்தது அவமரியாதை. அவமானகரமான த்துக்குரிய இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *