பிரமிப்பில் விஜய் தேவரகொண்டா..! குஜராத்தில் நடந்தது என்ன..?

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் நடிக்கும் படம் லைகர். புரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு இடங்களுக்கு படக்குழு சென்று வருகிறது. 

விஜய் தேவரகொண்டாவுக்கு தடபுடல் குஜராத்தி விருந்தை ரசிகர்கள் அளித்தனர்.  அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு விஜய் தேவரகொண்டா பட நிகழ்ச்சிக்காக சென்றார். அவர் வருவதை அறிந்து, ரசிகர்கள், குஜராத்தில் பிரபலமான உணவுகளை ஒரே தட்டில் பரிமாறி, விஜய் தேவரகொண்டாவுக்கு வழங்கினார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு தடபுடல் குஜராத்தி விருந்து -

இந்த தடபுடல் விருந்தை விஜய் ரசித்து சாப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தி ரசிகர்களின் அன்பை பார்த்து மெய்சிலிர்த்து போனேன். வெவ்வேறு விதமான உணவுகளையும் கொடுத்து, சிறப்பாக உபசரித்தார்கள். எனது இந்த புரமோஷன் பயணத்தில் குஜராத்தை எப்போதும் மறக்க மாட்டேன் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *