வசூலில் சாதனை படைத்த சீதா ராமம்: எத்தனை கோடி தெரியுமா?

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா ராமம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். அதே போல் தென்னிந்திய சினிமாவில் பட்டைய கிளப்பி வரும் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகிய இப்படமானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பாசிடிவ் விமர்சனங்கள் பெற்று வரும் இப்படமானது உலகளவில் முதல் நாளில் 5 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இரண்டாம் நாளில் இதன் வசூல் டபுள் மடங்காக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, இரண்டாம் நாளில் இப்படம் 10 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த படமானது தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதல் நாளில் தமிழ்நாட்டில் 20 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாளில் 80 லட்சத்திற்கும் மேல் வசூலித்து 4 மடங்கு அதிக வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் 6 நாட்களில் சுமார் 28 கோடி வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு வருகின்ற நாட்களில் வசூல் வேட்டையானது மேலும், அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *