செம்ம வைரல்!! இளவரசிகளின் ஜுவல்லரி பார்ட்னர்களை அறிமுகப்படுத்திய பொன்னியின் செல்வன்!!!

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

இந்த சூழலில் தற்போது ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ஆகியோர் ஆடை அணிவது போன்ற பிடிஎஃப் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் குந்தவை வேடத்தில் திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சோழ வம்சத்தின் வரலாற்று காவிய நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *