ஆத்தாடி..!! ஒரு இன்ஸ்ட்டா பதிவிற்கு இத்தனை லட்சமா? கொஞ்சம் ஓவர்தான்..!!

பாலிவுட்டில் மிக முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆலியாபட் நடிகர் ரன்பீர் கபூருடன் பிரமாஸ்திரா படத்தில் முதன் முதலாக ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் மும்பையில் உள்ள ரன்பீர் கபூர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்ட நிலையில் கரீனா கபூர், நீத்து கபூர், ஐயன் முகர்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கேன் செய்து உறுதி என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 5 மாத கர்பினியாக இருக்கும் ஆலியாபட் இன்ஸ்ட்டா பக்கத்தில் மட்டும் சுமார் 68.5 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.

அதன் படி, ஒரு விளம்பர பதிவிற்கு ரூ.85 லட்சம் முதல் ஒரு கோடி வரை கட்டணமாக வாங்குகிறாம். மேலும், சமூக வலைதளத்தின் மூலம் அதிக வருமானம் பெறும் நடிகைகளின் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *