ஜெயம் ரவியுடன் கைகோர்த்த லோக்கல் இயக்குநர்..!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குனர் எம்.ராஜேஷ் முழுநீள நகைச்சுவை படங்களை இயக்கியவர் சமீப காலமாக சுமாரான படங்களை இயக்கி  தோல்வி அடைந்தார்.

Photos from Jayam Ravi and Rajesh's 'JR30' movie launch rock the internet!  - News - IndiaGlitz.com

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. இந்நிலையில், எம்.ராஜேஷ் நடிகர் ஜெயம் ரவியின் 30-வது திரைப்படத்தை இயக்குகிறார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று படத்தின் பூஜை நடைபெற்றது.

ஸ்கிரீன் கிரீன் மீடியா தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *