#Breaking சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் மீண்டும் சோதனை!

Anbu cheziyan

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் மதுரை மற்றும் சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2020 பிப்ரவரி மாதம்  வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கோடிக்கணக்கில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

தற்போது சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை 6:00 மணி முதல் மதுரை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

மதுரையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா நிறுவனம் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலமாக படங்களை தயாரிப்பது, பைனான்சி செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…