ராஷ்மிகாவின் இன்ஸ்டா பதிவு: குவியும் லைக்ஸ் !!!

கீதா கோவிந்தம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இதனால் பல இளைஞர்களுக்கு அவர் மீது கிரஷ் இருப்பது தனிகதைதான். தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

இந்நிலையில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா ஏ சாமி ஏ சாமி என்ற என்ற பாடல் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிப்போனார்.

தளபதியின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தளபதின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் வாரிசு படத்தின் பூஜையில் போது நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக பல ஆண்டுகாலம் கனவு நிறைவேறியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இத பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது 5 மில்லியன் லைக்ஸை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.