வாழ்த்து மழையில் படக்குழு..!! குருதி ஆட்டம் படம் சூப்பர் – சிவகார்த்திகேயன்

8 தோட்டாக்கள் இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. குருதி ஆட்டம் படத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராக் போர்ட் என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி தள்ளிப் போனது, இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தை ஆகஸ்ட் 5-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குருதி ஆட்டம் திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் முருகானந்தம் உள்ளிட்ட படக்குழுவினர் பாராட்டியுள்ளார்